Friday, March 6, 2009

பழைய கணினிகளில் பயன்படுத்த 10 இலவச மென்பொருட்கள்

பழைய கணினிகளைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு புதிதாக மாறுபவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கணினியையே இன்னும் பயன்படுத்தும் மக்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்தப் பதிவு.

இன்றைய நவீனக் கணினி உலகில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை யெல்லாம் அந்தப் பழைய கணினிகளில் பயன்படுத்த இயலாது. வேக ஓட்டம் சீராக இருக்காது. சுத்தமாக அந்தப் பழைய கணினியானது செத்துச் செத்து விழும். இருப்பினும் அவர்களுடைய கணினியின் குறைந்தபட்சத் திறனை வைத்துக்கொண்டே அதிகபட்சச் செயல்பாட்டை அனுபவிக்கக் கீழ்க்கண்ட மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

1) குறைந்த கணினித்திறனையும், நினைவகத்தையும் உபயோகித்து PDF கோப்புகளைப் படிக்க Sumatra PDF பயன்படுத்தலாம். ( Adobe Reader ஐ பழைய கணினியில் நிறுவிப் பாருங்கள். கண்டிப்பாக நிறுவுவதற்கே நிறைய நேரம் பிடிக்கும். பின்பு PDF கோப்பைத் திறந்து பார்ப்பதற்கு இன்னும் அதிக நேரம் பிடிக்கும். )

2) MS Word க்கு மாற்றாக AbiWord பயன்படுத்தலாம். இலவசமாகக் கிடைக்கும் ஒரு Word prorcessing பயன்பாடு இது. 16 MB நினைவகம் கூட இந்தப் பயன்பாட்டின் செயல்பாட்டிற்கு மிக நல்ல வேகத்தை அளிக்கும்.

3) Photo Editing ன் அடிப்படைத் தேவைகளைச் செய்வதற்கு IrFanView பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் நீள,அகலத்தை மாற்றுவதற்கு இதைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம்.

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

இணைய வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.

யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com)

இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (உதாரணமாக YouTube™, Google Videos™, Break™ etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.

மணி-டியுப் இதுதான் அந்த தளம் சென்று பாருங்கள்.ஆனால் தற்போது அந்தத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இந்தவருடம் ஏப்ரல் 12 ம்திகதிக்கு பின் தான் இயங்குமாம்.

இன்னொரு தளம் metacafe.com இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.

Registry Disabled - சரி செய்வது எப்படி ?



Windows XP - இல் சில சமயங்களில், Registry - ஐ open செய்யமுடியாமல்

Registry Editing has been disabled by your administrator

என்று Error Message வரும். கீழ்கண்ட குறிப்பை பயன்படுத்தி அதை சரி செய்யலாம்,

கீழ்கண்ட command - ஐ அப்படியே Copy செய்து அதை notepad - open செய்து அதில் paste செய்யவும், அதை save செய்யும் போது yourfilename.REG என்று செய்யவும்,

REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableRegistryTools /t REG_DWORD /d 0 /f

பின் அந்த File - ஐ Run செய்யவும், இப்போது Registry - Open செய்யமுடியும்.

உங்களுக்கு Registry - ஐ Disable செய்யவேண்டுமானால் மேற்கண்ட Command REG_DWORD /d 0 /f
- இல் -இல் 0 வை 1 - என மாற்றி Save செய்து பின் Run செய்யவும்.

Labels: